Enable Javscript for better performance
தமிழ்ப் பயிற்றுமொழி மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பயிற்றுமொழி மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா

    By DIN  |   Published on : 01st June 2019 10:21 AM  |   அ+அ அ-   |    |  

    பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 2) கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தமிழ்ப் பயிற்று மொழியில் படித்து சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இது குறித்து கர்நாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கர்நாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பெங்களூரு,  யஷ்வந்த்பூரில் உள்ள தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளியில் ஜூன் 2-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தமிழ்ப் பயிற்றுமொழிப் பிரிவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு மற்றும் பொற்கிழி வழங்கும் விழா நடக்கவிருக்கிறது.  விழாவுக்கு எம்.ஆர்.பி.  கல்விச் சங்கச்  செயலாளர் ஒய்.ஜான் ஃபிராங்க் தலைமை வகிக்க,  சங்கச் செயலாளர் ஆ.வி.மதியழகன் வரவேற்கிறார்.
    நிகழ்ச்சியில்,  தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்மு.ஜான்சி(தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு,  லோ.கெளசல்யா (அரசு தமிழ் உயர்நிலைப் பள்ளி, சிமோகா),  து.தர்ஷினி (தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு),  மு.சிநேகா (ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில்குமரன் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு), ச.பாலமுருகன்(ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில்குமரன் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு), ம.பிரியா (அரசு தமிழ் உயர்நிலைப்பள்ளி, சிமோகா),  ஏ.பாரதி(தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு), ஏ.ஹரீஷ்(ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில்குமரன் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு), மு.சந்தோஷ்குமார் (ஸ்ரீஷைலா கல்விச்சங்கப் பள்ளி, பெங்களூரு), வ.சந்தியா(தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப்பள்ளி,  பெங்களூரு)ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்படுகிறார்கள்.
          மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் அளிக்கப்படுகிறது.  இதுதவிர, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மொழிப் பாடமாக தமிழ்மொழி பயின்று மாநில அளவில் சாதனை படைத்த 10 மாணவர்களும் பாராட்டப்படுகிறார்கள்.   தமிழ்க் கல்விக்கு ஊக்கமளித்துவரும் பெங்களூரு, மல்லேஸ்வரம்,  எம்இஎஸ் பியூ கல்லூரியின் முதல்வர் எல்.ராமு பாராட்டி கெளரவிக்கிறார்.
    கர்நாடக அரசின் சமூகநலத் துறை ஆணையர் வி.அன்புக்குமார்(ஐஏஎஸ்),  கூடுதல் இயக்குநர் டாக்டர்.வி.செளந்தர்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, மாணவர்களைப் பாராட்டி சிறப்புரை ஆற்றவிருக்கிறார்கள்.   நிறைவில்,  தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத் நன்றி கூறுகிறார்.  நிகழ்ச்சியை புலவர் மா.கார்த்தியாயினி தொகுத்து வழங்குகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp