Enable Javscript for better performance
அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 04th June 2019 09:37 AM  |   அ+அ அ-   |    |  

    அரசு தொழிற்பயிற்சி மையத்தில் (ஐ.டி.ஐ.) மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து பெங்களூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    பெங்களூரில் ஒசூர் சாலையில் உள்ள மையத்தின் நிர்வாகக் குழு இட ஒதுக்கீட்டின் கீழ் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
    மாநிலம் முழுவதும் உள்ள 270 அரசு ஐ.டி.ஐ.க்கள், 196 அரசு மானியம் பெறும் ஐ.டி.ஐ.க்கள் தேசிய தொழிற்பயிற்சி மையம், மாநில தொழிற்பயிற்சிமையங்களில் வழங்கப்படும் 40 வெவ்வேறு வகையான தொழில்பயிற்சிகளை பெறலாம். 
    இந்தப் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்களும், பெண்களும் தகுதியானவர்கள்.  சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பப்படிவங்களை  ‌w‌w‌w.‌e‌m‌p‌t‌r‌g.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய இயலும். மே 25 முதல் ஜூன் 15-ஆம் தேதிவரை இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம்.  மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
    இதனடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும். இதுகுறித்துமேலும்விவரங்கள் அறிய 080-25189105 என்ற தொலைபேசிஎண்அல்லது  ‌k​a‌r​c‌e‌t.‌i‌t‌i.​a‌d‌m‌i‌s‌s‌i‌o‌n‌s@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற மின்னஞ்சலை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp