டிராக்டர் மோதியதில் மூதாட்டி பலி
By DIN | Published On : 19th June 2019 09:45 AM | Last Updated : 19th June 2019 09:45 AM | அ+அ அ- |

பாரூர் அருகே டிராக்டர் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
போச்சம்பள்ளி அடுத்த பாரூர் பெரிய ஏரியில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் கீழ்குப்பம் கிராமத்துக்கு மண் ஏற்றிச் சென்ற டிராக்டர் கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வஜ்ஜிரவேல் என்பவரின் மனைவி சுந்தரம்மாள் (84) மீது மோதியதில் அவர் காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.