ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
By DIN | Published On : 23rd June 2019 03:34 AM | Last Updated : 23rd June 2019 03:34 AM | அ+அ அ- |

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவருக்கு பதவி உயர்வு அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராகப் பதவிவகிக்கும் டாக்டர் ராஜ்குமார் கட்டாரியா, கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, வருவாய்த் துறையுடன் கூடுதல் பொறுப்பாக ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.பசவராஜூ, கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளார். இவர், வனத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை, உள்கட்டமைப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.