எம்எல்ஏ இரா.தமிழ்ச்செல்வன் இல்ல திருமண வரவேற்பு விழா: நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு
By DIN | Published On : 25th June 2019 09:28 AM | Last Updated : 25th June 2019 09:28 AM | அ+அ அ- |

மகாராஷ்டிர எம்எல்ஏ கேப்டன் இரா.தமிழ்ச்செல்வனின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று, மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
"தமிழர் நலக் கூட்டமைப்பு- மகாராஷ்டிரா' என்ற அமைப்பின் தலைவரும், மும்பை சயான் கோலிவாடா தொகுதி எம்எல்ஏவுமான கேப்டன் இரா. தமிழ்ச்செல்வன் மகள் வைஷாலி- ராஜ்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா மும்பை கே.ஜே.சோமையா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நடிகர் ரஜினிகாந்த் மாநில அமைச்சர் ஆஷிஷ் சேலார், எம்.பி.க்கள் கோபால் ஷெட்டி, ராகுல் ஷேவாலே, பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், திரைப்பட இயக்குநர் அருண் பாண்டியன், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணமகன் இல்ல உறவுகளான கல்லாக்கோட்டை ஜமீன்தார் குடும்பத்தினர் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தாருடன் தமிழர் நலக் கூட்டமைப்பு நிர்வாகக் குழுத் தலைவர் கர்னல் ஆ. பாலசுப்ரமணியன், அமைப்பாளர்கள் மா.கருண், ச.இராஜேந்திரன் சுவாமி, கராத்தே இரா.முருகன், செ.அங்கப்பன், வெ.குமார், அனிதா டேவிட் உள்ளிட்டோர் இணைந்து செய்திருந்தனர்.