பைக் மீது டேங்கர் லாரி மோதல்: பெண் உள்பட 2 பேர் சாவு
By DIN | Published On : 25th June 2019 09:29 AM | Last Updated : 25th June 2019 09:29 AM | அ+அ அ- |

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில், படுகாயமடைந்த பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சிக்மகளூரு பழைய லகாயா கிராமத்தைச் சேர்ந்தவர் லதாமணி (25). இவரது மைத்துனர் மனோஜ் (19). திங்கள்கிழமை லதாமணி தனது கைக் குழந்தையுடன், மனோஜுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த டேங்கர் லாரி மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த லதாமணி, மனோஜ் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிக்மகளூரு ஊரக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.