சுடச்சுட

    

    வரி வசூலில் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது: குமாரசாமி

    By DIN  |   Published on : 26th June 2019 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவில் பொருள் மற்றும் சேவை வரி உள்ளிட்ட வரி வசூலில் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
    பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 15-ஆவது நிதி ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது: கர்நாடகம் தொழில், தகவல், உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் வரி வசூல் செய்வதிலும் சிறந்து விளங்குகிறது. பொருள் மற்றும் சேவை, கலால், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு வரி வசூலிப்பதில் முதல் இடத்தில் உள்ளது. எனவே, கர்நாடகத்துக்கு நிதி வழங்குவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். 
    நிதி வல்லுநரான 15-வது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே.சிங், மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு சிறப்பான அறிக்கை அளிப்பதன் மூலம் தேவையான நிதி வழங்கப்படும் என நம்புகிறேன். கர்நாடகத்தில் அன்னபாக்யா, பால் பாக்யா உள்ளிட்ட திட்டங்கள் எந்த ஒரு நிதி பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வட்டியில்லாத கடன், இஸ்ரேல் நாட்டில் பின்பற்றப்படும் வேளாண்முறை, வேலை வாய்ப்பை உருவாக்குவது, உற்பத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 
    மெட்ரோ ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு மாநில அரசு, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளது என்றார். 
    நிகழ்ச்சியில் 15-வது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே.சிங், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai