பொது இடங்களில் புகைபிடித்தவர்களிடம் அபராதமாக ரூ.45 ஆயிரம் வசூல்

பொது இடங்களில் புகைபிடித்தவர்களிடம் அபராதமாக ரூ.45 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

பொது இடங்களில் புகைபிடித்தவர்களிடம் அபராதமாக ரூ.45 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும், 228 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சி.அனிதா செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு மாவட்டத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இதுவரை பொது இடங்களில் விதிகளை மீறி புகைப்பது தொடர்பாக 228 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ. 45,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
பொது இடங்களில் விதிகளை மீறி புகைப்பிடிப்போரிடம் வசூலிக்கப்படும் அபராதமான ரூ. 200-ஐ உயர்த்தி ரூ.1,000 வரை வசூலிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் புகைபிடிப்போர் குறித்து புகார் அளிக்க, விரைவில் செல்லிடப்பேசி செயலி தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com