"சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்'
By DIN | Published On : 02nd March 2019 08:59 AM | Last Updated : 02nd March 2019 08:59 AM | அ+அ அ- |

சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று சிறுபான்மை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் முகமது ஜப்ருல்லாகான் தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவெ கெளடா ஆகியோர் அனைத்து சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார். குறிப்பாக சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாக உள்ளார்.
அரசும், சிறுபான்மையினரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுப்பேன். சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மஜத கட்சியின் தலைவர்களுக்கு நன்று கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
முன்னதாக வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் முகமது ஜப்ருல்லாகானுக்கு அமைச்சர் ஜமீர் அகமதுகான், முன்னாள் அமைச்சர் ரோஷன்பெய்க் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.