சுடச்சுட

  

  எம்பஸி ஆபிஸ்பார்க் குழுமத்தின் பங்குகள் மார்ச் 18-ஆம் தேதி முதல் வெளியிடப்படுகிறது.
  இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை எம்பஸி ஆபிஸ்பார்க் குழுமத்தின் செயல் அதிகாரி மைக்கேல் ஹாலந்து செய்தியாளர்களிடம் கூறியது: எங்கள் குழுமத்தின் சார்பில் மார்ச் 18-ஆம் தேதி சமபங்குகளை வெளியிடுகிறோம். இதன்மூலம் 47,500 மில்லியன் பங்குகள் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். ஒரு பங்கின் விலை ரூ.299 முதல் ரூ.300 வரை இருக்கும்.
   மார்ச் 20-ஆம் தேதிவரை பங்குகள் விற்பனை நடக்கும். முதலீட்டாளர்கள் குறைந்தது 800 சமபங்குகள் அல்லது அதன் பெருக்கல்தொகையில் பங்குகளை வாங்க வேண்டும். சம்பங்குகள் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசியபங்கு ச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பங்குவிற்பனை மூலம் திரட்டப்படும் மூலதனத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai