சுடச்சுட

  

  கட்டுமானத்தில் செலவு, நேரத்தை குறைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று எவரெஸ்ட் குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
  பெங்களூரில் வெள்ளிக்கிழமை கட்டுமானத்தில் செலவு, நேரத்தை குறைக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து அவர் பேசியது: நீண்ட காலம் நடைபெறும் கட்டுமானத்தால், அதிக செலவு, நேரம் வீணாகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத கட்டுமானத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதனால் தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும். 
  இந்த தொழில்நுட்பத்தால் கட்டடங்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு சேதமில்லாமல் மாற்றுவது எளிதாகியுள்ளது. மேலை நாடுகளில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த தொழில்நுட்பத்துக்கு தென் இந்தியாவில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai