சுடச்சுட

  

  "கர்நாடகத்தில் 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெறும்'

  By DIN  |   Published on : 16th March 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
  கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள சித்தராமையாவின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ், மஜத இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளும், மஜதவுக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வேன். இதில் ஹாசன், மண்டியா விதிவிலக்கல்ல.
  மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது, பல தடவை பாகிஸ்தானுடன் போர் நடந்துள்ளது. அதில் வங்காள தேசத்திற்காக நடைபெற்ற போரை கூறலாம். அப்போது பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்தது. அந்த வெற்றிக்கு இணையாக தற்போது எதையும் கூறமுடியாத நிலையில், பயங்கரவாதிகள் மீது நடைபெற்ற தாக்குதலை பாஜக தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகிறது. 
  உணர்ச்சிபூர்வமான விவகாரங்களை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவது முறையல்ல. தேர்தல் நெருங்கினால் ராமர் கோயிலைக் கட்டுவது குறித்து பேசும் பாஜகவினர், ஏழைகள், விவசாயிகள் தற்கொலைகளை குறித்து பேசுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியிலிருந்த பாஜகவினர் எந்த சாதனைகளையும் செய்யவில்லை. எனவேதான், பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலை, தங்கள் சாதனையாக பாஜக பிரசாரம் செய்து வருகிறது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai