வேட்பாளர்கள் தேர்வு: பாஜக நாளை ஆலோசனை

பெங்களூரில் மார்ச் 17-ஆம் தேதி நடைபெறும் பாஜக உயர்நிலை குழுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

பெங்களூரில் மார்ச் 17-ஆம் தேதி நடைபெறும் பாஜக உயர்நிலை குழுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.18, 23ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடக்கவிருக்கிறது.முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக ஆராய்ந்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பெங்களூரில் உள்ள பாஜக தலைமைஅலுவலகத்தில் மார்ச் 17-ஆம் தேதி அக்கட்சியின் மாநிலத்தலைவர் எடியூரப்பா தலைமையில் உயர்நிலை குழுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. 
இக்கூட்டத்தில் இறுதிசெய்யப்படும் வேட்பாளர் பட்டியல் தேசியத் தலைமைக்கு அனுப்பி, ஒப்புதல் பெறப்படுகிறது. அதன்பிறகு,மார்ச் 18-ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com