சுடச்சுட

  

  தினமும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது சமுதாய ஆரோக்கியத்துக்கு நல்லது

  By DIN  |   Published on : 17th March 2019 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


   தினமும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது சமுதாயத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதாகும் என வேளாண் துறை செயலர் ராஜேந்திரகுமார் கட்டாரியா தெரிவித்தார்.
  பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற டிசிஎஸ் உலக 10கே தொடர் ஓட்டம்-2019-ஐ அறிமுகம் செய்து வைக்கும் விழாவில் பங்கேற்று அவர் பேசியது: தில்லியில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்த போது, தினமும் 400 கோப்புகளை பார்க்க செலவிடுவேன். இதனால் உடல் பருத்து, உடல்நிலை கெட்டுவிட்டது. 2014-ஆம் ஆண்டில் பெங்களூருக்கு பணிமாறுதல் பெற்று வந்த போது, இங்குள்ள இதமான தட்பவெப்பம் என்னை தினமும் ஓடவைத்தது. இந்த ஓட்டப்பயிற்சி எனக்கு புத்துணர்வை அளித்ததோடு எனது செயல்திறனை மேம்படுத்தியது.
  ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது உடலை மட்டுமல்லாமல் நமது செயலையும் செம்மையாக்கும் என்பது என் அனுபவமாகும். அதனால், எனது பணிகள் அலுவலகத்தில் வேகமெடுத்துள்ளன. இது அரசு நிர்வாகத் திறன் மேம்பாட்டுக்கும் நல்லதாக இருக்கிறது. இதை அனைவரும் பின்பற்றினால் உடல் மற்றும் செயல்திறன் பெருகும். அது நமது சமுதாயம், பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தையும் பேணி பாதுகாக்கும். எனவே, தினமும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது சமுதாயத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதாகும் என்றார் அவர். 
  தொடர் ஓட்டம் நிகழ்வை நடத்தும் புரோகேம் பன்னாட்டு நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் விவேக்சிங் பேசுகையில், 2019-ஆம் ஆண்டுக்கான தொடர் ஓட்டம் மே 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு மார்ச் 17 தொடங்கி ஏப். 26-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 12-ஆம் ஆண்டாக பெங்களூரில் நடைபெறும் டிசிஎஸ் உலக 10கே தொடர் ஓட்ட நிகழ்வில் பல்வேறு போட்டிகள் உள்ளன. இதில் அனைவரும் பங்கேற்கலாம். பெங்களூரு தொடர் ஓட்ட நிகழ்வுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால், இந்தியாவின் ஓடும் தலைநகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது என்றார் அவர்.
  விழாவில் தொடர் ஓட்டத்தை நடிகர் புனித் ராஜ்குமார் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் டிசிஎஸ் நிறுவன அதிகாரி நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai