Enable Javscript for better performance
பெங்களூரு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    


    பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம்-தொலைதூரக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி இயக்குநரகத்தின் சார்பில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளான பிஏ, பிகாம், பிபிஏ, முதுநிலை பட்டப்படிப்புகளான எம்ஏ, எம்காம், எம்எஸ்சி (கணிதம்), முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    அபராதமில்லாமல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி மார்ச் 15-ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 30-ஆம் தேதி வரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ.200 அபராதம் செலுத்தி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற மார்ச் 30-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்படுகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 30-ஆம் தேதி ஆகும்.
    இதில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு  இணையதளத்தில் காணலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961261, 22961262, 22961263, 22961264, 22961265, 22961266, 22961267 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai