சிறப்பு கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கர்நாடக அரசின் பயிற்சி மையத்தில் சிறப்பு கல்வி ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கர்நாடக அரசின் பயிற்சி மையத்தில் சிறப்பு கல்வி ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் குழந்தைகளின் ஆசிரியர் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில அரசின் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறையின் கீழ் மைசூரு, திலக் நகரில் இயங்கி வரும் அரசு பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் குழந்தைகளின் ஆசிரியர் பயிற்சி மையத்தில் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சி (டிஎட்எஸ்ஐ-விஐ), காதுகேளாதோர் குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சி (டிஎட்எஸ்ஐ-எச்எச்) ஆகிய பயிற்சிகளை வழங்கி வருகிறது. சிறப்பு கல்வித் துறையில் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கில் 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இப்பயிற்சியில் சேர்ந்து படிக்க ஆர்வமுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி மையத்தில் நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள், முழுமையான வசதிகள் கொண்ட நூலகம், பயிற்சிக் கூடங்கள், கணினி ஆய்வுக் கூடங்கள் உள்ளன. இந்த பயிற்சியில் சேருவோருக்கு அரசு அல்லது அரசு உதவிபெறும் விடுதிகளில் தங்க வசதி செய்து தரப்படும்.
பயிற்சி மையத்தில் சிறப்பு கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆசிரியராக, மத்திய அரசு நிதியுதவியுடன் நடைபெறும் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மனிதவள ஆசிரியராக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்களில் மனிதவள ஆற்றலாளராக பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், மாநில கல்வித் துறை நடத்திவரும் ஆசிரியர் தகுதிகாண் தேர்வு, ஆசிரியர் பணித் தேர்வுகளிலும் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணியில் ஈடுபடலாம்.
மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநர், அரசு பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் குழந்தைகளின் ஆசிரியர் பயிற்சி மையம், திலக் நகர், மைசூரு-21 என்ற முகவரி அல்லது 0821-2491600 என்ற தொலைபேசி,   மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பப் படிவங்களை  இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com