ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

கோடை விடுமுறை தொடங்கிவிட்டதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோடையின் தொடக்கத்திலே வெயிலின் தாக்கம் கடந்தாண்டைவிட அதிகமாகவுள்ளது. வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி வெப்ப நிலை நூறு டிகிரியை தாண்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் அனல் காற்று மற்றும் வெப்பத்தை தணிக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீராடி வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் முயற்சியில் சேலம், பெங்களூரு, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.  

நீர்வீழ்ச்சியில் குளித்தும், எண்ணெய் மசாஜ் செய்தும் பொழுதை போக்கிய சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில்  நீர்வரத்து குறைந்து காணப்படுவதால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவியில் குளிக்காமல், ஆற்றங்கரையோர பகுதியில் ஆபத்தான இடங்களில் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com