லஞ்சம்: மின்வாரிய இளம் பொறியாளர் கைது
By DIN | Published On : 22nd March 2019 08:54 AM | Last Updated : 22nd March 2019 08:54 AM | அ+அ அ- |

புதிதாக மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய இளம் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம் மங்களூரு வட்டத்தைச் சேர்ந்த மின் ஒப்பந்ததாரர் ஒருவர், புதிதாக இணைப்பு வழங்குவதற்கும், கூடுதலான இணைப்பிற்கும் மங்களூரு பைக்கம்பாடி துணைப்பிரிவு மெஸ்காம் அலுவலகத்திற்கு மனு அளித்துள்ளார்.
மனுவை பரிசீலித்த மெஸ்காம் மின்வாரிய அலுவலக இளம் பொறியாளர் ராகவா, ரூ. 5 ஆயிரம் லஞ்சம் அளிக்குமாறு கேட்டுள்ளார். ரூ. 5 ஆயிரம் லஞ்சப்பணத்தை புதன்கிழமை ராகவாவிடம், சம்பந்தப்பட்ட நபர் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினர் அவரைக் கைது செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...