இலவச பிளாஸ்டிக் தொழில் பயிற்சி
By DIN | Published On : 24th March 2019 05:52 AM | Last Updated : 24th March 2019 05:52 AM | அ+அ அ- |

இலவச பிளாஸ்டிக் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (சிபெட்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மைசூரில் உள்ள மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் இலவச பிளாஸ்டிக் தொழில் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க பெங்களூரு மாவட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வேலையில்லா இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேருவோருக்கு இலவச உணவு, தங்கும் வசதி, ரூ.500 மாத உதவித்தொகை அளிக்கப்படுகிறது. தொழில்பயிற்சிக்கு பிறகு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். 6 மாதங்களுக்கு நடைபெறும் இந்த பயிற்சியில் சேர எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம், பட்டதாரி படித்த 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். 200 மாணவர்கள் மட்டும் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவர். மேலும் விவரங்களுக்கு 0821-2510618, 2511903, 9632688884, 8762342432 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.