தொலைநிலை ஆங்கிலக் கல்வி

மண்டலஆங்கில மையத்தின் சார்பில் தொலைநிலை ஆங்கிலக் கல்வி வழங்கப்படுகிறது.


மண்டலஆங்கில மையத்தின் சார்பில் தொலைநிலை ஆங்கிலக் கல்வி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மண்டல ஆங்கில மையம்-தென்னிந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு, ஞானபாரதி வளாகத்தில் அமைந்துள்ள மண்டல ஆங்கில மையம்-தென்னிந்தியாவின் சார்பில் தொலைநிலை ஆங்கிலக் கல்வி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர்ந்து பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறலாம்.
ஓராண்டுக்கான முதுநிலை ஆங்கில மொழி பட்டயப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் ரூ.250-க்கு விற்கப்படுகிறது. இப்பயிற்சியின் கல்விக் கட்டணம் ரூ.9 ஆயிரமாகும்.
ஓராண்டுக்கான தகவல்தொடர்பு பட்டயப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறறது. இந்த பயிற்சிக்கு பியூசி/10+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் ரூ.250-க்கு விற்கப்படுகிறது. இப்பயிற்சியின் கல்விக்கட்டணம் ரூ.2,500 ஆகும். விண்ணப்பப் படிவங்களை ரூ.250-க்கு வங்கி வரைவோலை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். முதலில் வருவோருக்கு முதலில் சேர்க்கை என்ற அடிப்படையில் சேர்க்கை அளிக்கப்படும். விண்ணப்பங்களை மே 31-ஆம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 080-23213243 அல்லது   இணையதளத்தை அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com