மார்ச் 28-இல் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்
By DIN | Published On : 24th March 2019 05:54 AM | Last Updated : 24th March 2019 05:54 AM | அ+அ அ- |

பெங்களூரில் மார்ச் 28-ஆம் தேதி அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடக அஞ்சல் வட்டத்தின் சார்பில் பெங்களூரு, அரண்மனை சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அதிகாரி, கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலக மாநாட்டு அரங்கில் மார்ச் 28-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. பெங்களூரு மண்டலத்தைச் சேர்ந்த அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால், அவற்றை உதவி இயக்குநர் (அஞ்சல் இயக்கம்), தலைமை அஞ்சல் அதிகாரி, கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு மார்ச் 25-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
புகார்களை ற்ங்ஸ்ரீட்.ந்ஹழ்க்ஷஞ்ஃண்ய்க்ண்ஹல்ர்ள்ற்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். புகார்களுடன் ஆதாரங்களை இணைப்பது நல்லது. மேலும், புகார் கடிதத்தில் தெளிவான தொடர்பு முகவரியை குறிப்பிடவும். மேலும் விவரங்களுக்கு 080-22392631, 22392543 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம்.