தகுந்த வேட்பாளரை நிறுத்த முடியாத நிலை: வட பெங்களூரு மக்களவைத் தொகுதியை காங்கிரஸுக்கு திரும்ப அளித்தது மஜத

தகுந்த வேட்பாளரை நிறுத்தமுடியாமல் நிலையில் இருந்த மஜத,  தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வட பெங்களூரு மக்களவைத் தொகுதியை காங்கிரஸிடம் திரும்ப அளித்துவிட்டது.

தகுந்த வேட்பாளரை நிறுத்தமுடியாமல் நிலையில் இருந்த மஜத,  தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வட பெங்களூரு மக்களவைத் தொகுதியை காங்கிரஸிடம் திரும்ப அளித்துவிட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டி,  காங்கிரஸ்- மஜத கூட்டணியில் நிலையில் வட பெங்களூரு உள்ளிட்ட 8 தொகுதிகள் மஜதவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. 
வடபெங்களூரு அல்லது தும்கூரு ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவதென்று மஜத தேசியத்தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகெளடா ஆலோசித்தார். இதையடுத்து, தும்கூரு தொகுதியில் போட்டியிடுவதாக மார்ச் 23-இல் தேவெகெளடா அறிவித்தார்.  அதன்படி, தும்கூருவில் திங்கள்கிழமை வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், வடபெங்களூரு தொகுதியிலும் தேவெகெளடா போட்டியிடும்படி மஜதவினர் வலியுறுத்தியிருந்தனர்.  ஆனாலும் இரு தொகுதிகளில் போட்டியிட தேவெகெளடா விரும்பவில்லை.  மேலும், வடபெங்களூரு தொகுதிக்குத் தகுதியான வேட்பாளரை கண்டறிய இயலாமல் போனதால், அத்தொகுதியை திரும்ப காங்கிரசிடமே மஜத ஒப்படைத்துள்ளது.
கர்நாடகத்தில் ஏப்ரல் 18-இல் தேர்தலை சந்திக்கும் வடபெங்களூரு தொகுதிக்கு வேட்புமனுதாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமை(மார்ச் 26)கடைசிநாளாகும். 
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக  நிறுத்த தகுதியானவரை அந்தக் கட்சி தேட தொடங்கியுள்ளது. தும்கூரு எம்பி முத்தனுமே கெளடா வடபெங்களூரு தொகுதியில் போட்டியிடவிரும்பவில்லை.  இதனால்,, பி.எல்.சங்கரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் ஆலோசித்துவருகிறது. 
இதுகுறித்து  காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது சுட்டுரையில்,"வடபெங்களூரு தொகுதியை திரும்ப காங்கிரஸிடம் அளித்து வெளிப்படுத்தியுள்ள நல்லெண்ணத்துக்காக   மஜதவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.  கூட்டாக ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com