Enable Javscript for better performance
தடியால் தாக்கி பெண் கொலை- Dinamani

சுடச்சுட

    

    தடியால் தாக்கி பெண்ணை கொலை செ ய்த  அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     இதுதொடர்பாக  வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரது கணவரை தேடி வருகின்றனர்.
    தமிழ்நாடு திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி வள்ளி. கட்டுமான தொழிலாளர்களாக பணியாற்றி வந்த இவர்கள், பெங்களுரு ஊரகம் ஜிகினி சீதாநாயகனஹள்ளியில் வசித்து வந்தனர். மதுபோதைக்கு அடிமையாக இருந்த ராஜு, திங்கள்கிழமை பணிமுடிந்து, மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து ராஜுவிற்கும் வள்ளிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    இதில் ஆத்திரமடைந்த ராஜு, வள்ளியை தடியால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த ஜிகினி போலீஸார், தப்பியோடியுள்ள ராஜுவைச் தேடி வருகின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai