Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தலில் தேஜஸ்வினிக்கு வாய்ப்பு மறுப்பு: எடியூரப்பா விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் தேஜஸ்வினிக்கு வாய்ப்பு மறுப்பு: எடியூரப்பா விளக்கம்

    By DIN  |   Published on : 27th March 2019 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் தென்பெங்களூரு தொகுதியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினிக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு மறுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
    இத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வ் சூர்யா செவ்வாய்க்கிழமை காலை எடியூரப்பா இல்லத்துக்குச் சென்று வாழ்த்து பெற்றார்.  அவரை வழியனுப்பி வைத்த எடியூரப்பா,  செய்தியாளர்களிடம் கூறியது: 
    தென்பெங்களூரு மக்களவைத் தொகுதிக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி அனந்த்குமாரின் பெயரை பரிந்துரை செய்திருந்தோம்.  ஆனால், செவ்வாய்க்கிழமை அதிகாலை அத் தொகுதியின் பாஜக வேட்பாளராக தேஜஸ்வ் சூர்யாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 
    தேஜஸ்வினி அனந்த்குமாரின் பெயர் விடுப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.  தில்லியில் நடைபெற்ற தென்பெங்களூரு மக்களவைத் தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து எனது கவனத்துக்கு எந்த தகவலும் வரவில்லை.  என்றாலும்,  பாஜக மேலிடத் தலைவர்களின் முடிவை ஏற்று, அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai