Enable Javscript for better performance
மாகடிசாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் வாகனங்கள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    மாகடிசாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் வாகனங்கள் ஏலம்

    By DIN  |   Published on : 27th March 2019 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு மாகடிசாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் மார்ச் 29-ஆம் தேதி வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
    இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் பெங்களூரு மாகடிசாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் மார்ச் 29-ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942672 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    ஐபிஎல் கிரிக்கெட்: மெட்ரோ ரயில் சேவை கால நீட்டிப்பு
    பெங்களூரு, மார்ச் 26:  பெங்களூரில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு 12.30 மணி வரை நீட்டிக்க பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் முடிவுசெய்துள்ளது.
    இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் மார்ச் 28, ஏப். 5, 24, 30  ஆகிய தேதிகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இந்த போட்டிகளின் போது மைசூரு சாலை முதல் பையப்பனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு 12.30 மணிவரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 20 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். இரவு 10 மணிக்கு மேல் டோக்கன்களுக்கு பதிலாக காகிதத்தில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டு விநியோகிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai