Enable Javscript for better performance
விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது அவசியமற்றது: நடிகை சுமலதா- Dinamani

சுடச்சுட

    

    விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது அவசியமற்றது: நடிகை சுமலதா

    By DIN  |   Published on : 27th March 2019 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது அவசியமற்றதாக கருதுகிறேன் என்றார்  மண்டியா மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா.
    மண்டியா மக்களவைத் தொகுதி கே.ஆர்.எஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியது: மண்டியா தொகுதி மட்டுமின்றி கர்நாடகத்தில் பரவலாக மறைந்த எனது கணவர் அம்பரீஷ் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து கொடுத்துள்ளார். நடிகராகவும், பின்னர் அமைச்சராகவும் அவர் ஆற்றிய பணிகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 
    ஆனால், எனது கணவர் தான் செய்த பணிகளை எங்கும் கூறிக் கொள்ளவில்லை. அதேபோல எனக்கு எதிராக யார் என்ன விமர்சனம் செய்தாலும், அவர்களுக்கு எந்த பதிலையும் கூறமாட்டேன். நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எனது பணிகளே அவர்களுக்கு பதில் கூறும். நான் தேர்தலில் போட்டியிடுவது ஜாதி அரசியல் செய்ய அல்ல. மண்டியா மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே போட்டியிடுகிறேன் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai