Enable Javscript for better performance
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மாதிரி விடைகள் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் இடம்பெற்றிருந்த வினாக்களுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.
    இதுகுறித்து கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம்(கே.எஸ்.இ.இ.பி.)வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியத்தின் சார்பில் (கேஎஸ்இஇபி)எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கடந்த மார்ச் 21 முதல் தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள முதல் மொழிப்பாடம், இரண்டாம் மொழிப்பாடம்,கணிதப் பாடங்களுக்கான தேர்வில் இடம்பெற்ற வினாத்தாள்களுக்கான மாதிரி விடைகள் மாணவர்கள் சரிபார்த்து கொள்வதற்காக   ‌h‌t‌t‌p://‌ w‌w‌w.‌k‌s‌e‌e​b.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
    இதில் தவறு ஏதுமிருந்தால் மார்ச் 29-ஆம் தேதிக்குள் பெற்றோர்கள், மாணவர்கள் ஆட்சேபனைகளை இணையதளத்தில் விளக்கங்களுடன் பதிவு செய்யலாம். 
    ஆட்சேபனைகளை தெரிவிக்கும் போது பாடம், வினாத்தாள்வகை, வினா எண்களை தெளிவாக குறிப்பிட கேட்டுக் கொள்கிறோம். சரியானவிளக்கம் அளிக்காத ஆட்சேபனைகள் நிராகரிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai