Enable Javscript for better performance
ஏப்.2 முதல் கோடைகால அறிவியல் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் ஏப்.2-ஆம் தேதி முதல் கோடைகால அறிவியல் முகாம் நடத்தப்படுகிறது.
    இதுகுறித்து ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் சார்பில் பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ் செளடையா சாலையில் உள்ள கோளரங்க வளாகத்தில் ஏப்.2-ஆம் தேதி முதல் அறிவியல் மாணவர்களுக்காக கோடைகாலஅறிவியல் முகாம் நடத்தப்படுகிறது. ஏப்.10 முதல் 14-ஆம் தேதிவரை தினமும் காலை 10.30மணி முதல் நண்பகல் 1மணிவரை 8 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விண்வெளி கணினியியல் பயிற்சி முகாம்; ஏப்.2 முதல் 7-ஆம் தேதிவரை, ஏப்.23 முதல் 27-ஆம் தேதிவரை தினமும் காலை 10.30மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை மற்றும் மாலை 3 மணி முதல் மாலை 5மணிவரை 3 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட்டி அறிவியல் உலகம் பயிற்சிமுகாம்; ஏப்.10 முதல் 14-ஆம் தேதிவரை தினமும் காலை 10.30மணி முதல் நண்பகல் 12.30மணிவரை 6 முதல் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டாக அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
    ஏப்.17 முதல் மே 4-ஆம் தேதிவரை தினமும் காலை 10.30மணி முதல் மாலை 3மணிவரை 9 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொருள் பகுப்பு பயிற்சிமுகாம்; ஏப்.19 முதல் 21-ஆம் தேதிவரை தினமும் மாலை 4மணி முதல் முன்னிரவு 7 மணிவரை 8-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்பறையில் அண்டம் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
    ஏப்.28 மற்றும் மே 5-ஆம் தேதியில் தினமும் காலை 10.30மணி முதல் மாலை 3.30மணிவரை 8 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பகா எண் மற்றும் பொம்மைகளின் அறிவியல் பயிற்சி முகாம் ஏப்.7 முதல் மே 26-ஆம் தேதிவரை சனி, ஞாயிறுகளில் தினமும் காலை 10.30மணி முதல் நண்பகல் 12மணிவரை 8-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு விண்ணியல் அடிப்படைகள் பயிற்சிமுகாம்; மே 17 முதல் 19-ஆம் தேதி வரை தினமும் மாலை 4மணி முதல் மாலை 5.30 மணி வரை 10-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இந்திய விண்ணியல் கோட்பாடுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    ஏப்.19 முதல் 21-ஆம் தேதிவரை தினமும் காலை 10.30மணி முதல் நண்பகல் 12.30மணிவரை 8 முதல் 10-ஆம் வகுப்பு பகல் நேர விண்ணியல் பயிற்சி முகாம்; மே 21 முதல் ஜூன் 1-ஆம் தேதிவரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 3.30மணிவரை 12-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உயிரில் இருந்து அண்டம் வரை பயிற்சி முகாம்; ஏப்.24-ஆம் தேதி காலை 10.30மணி முதல் மாலை 3.30மணிவரை 8-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பூஜ்ய நிழல் தினம் பயிற்சி முகாம்; மே 2-ஆவது வாரத்தில் நாள் முழுவதும் பொதுமக்களுக்கு தொலைநோக்கி கட்டமைப்பு பயிலரங்கம் நடக்கவிருக்கிறது. 
    இந்த முகாமில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளோர் முன்பதிவு சய்து கொள்வதுஅவசியமாகும். முன்பதிவுக்கு w‌w‌w.‌t​a‌r​a‌l​a‌y​a.‌o‌r‌g என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி  எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai