Enable Javscript for better performance
ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரில் இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரில் இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு வியாழக்கிழமை கூடுதல் பேருந்துகளை இயக்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
    இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை(மார்ச் 28)ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு பெங்களூரு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு கூடுதல் பேருந்துசேவைகள் இயக்கப்படுகின்றன. 
    மைதானத்துக்கு இரவு 8 மணிக்கு செல்லும் வகையில் மாலை 6 மணியில் இருந்து கூடுதல் பேருந்துசேவைகள் இயக்கப்படும். அதேபோல, கிரிக்கெட் போட்டி முடிந்ததும் வீட்டுக்கு திரும்பும் வகையில் இரவு 11.30 மணியில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். 
    சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து காடுகோடி பேருந்துநிலையம், சர்ஜாபுரா,எலக்ட்ரானிக்சிட்டி, பன்னர்கட்டா தேசியப்பூங்கா, கெங்கேரி, ஜனபிரியா டவுன்ஷிப், நெலமங்களா, எலஹங்கா 5-ஆபது பேஸ், ஆர்.கே.ஹெக்டேநகர், பாகலூர், ஹொஸ்கோட்டேபேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
    இவை தவிர, பையப்பனஹள்ளி, எஸ்.வி., நாயண்டஹள்ளி, ஜாலஹள்ளி கிராஸ் மெட்ரோ ரயில்நிலையங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai