Enable Javscript for better performance
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எஸ்யூசிஐ(சி) ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரகாஷ் ராஜுக்கு எஸ்யூசிஐ(சி) ஆதரவு தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து எஸ்யூசிஐ(சி)கட்சியின் மாநிலச் செயலாளர் கே.உமா வெளியிட்ட அறிக்கை:
    நடிகர் பிரகாஷ்ராஜ், மிகவும் பிரபலமான திரைப்படநடிகர் மற்றும் சமூக ஆர்வலர். இவர் மத்திய பெங்களூரு தொகுடியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர், தனது பிரசாரத்தின் போது முற்போக்கு கருத்துகளை மட்டுமல்லாது மக்கள்நலன்சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். 
    மதவாதம், பாசிசத்துக்கு எதிராக பேசிவரும் பிரகாஷ்ராஜை முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக எதிர்க்கின்றன. இதன்பின்னணியில், மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான பிரகாஷ்ராஜுக்கு எஸ்யூசிஐ(சி)முழு ஆதரவை அளிக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai