Enable Javscript for better performance
மிஷன் சக்தி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல: மல்லிகார்ஜுன கார்கே- Dinamani

சுடச்சுட

    

    மிஷன் சக்தி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல: மல்லிகார்ஜுன கார்கே

    By DIN  |   Published on : 28th March 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மிஷன் சக்தி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
    இதுகுறித்து கலபுர்கியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மிஷன் சக்தி திட்டத்தை 2012-ஆம் ஆண்டிலே முந்தைய காங்கிரஸ் அரசு தயாரித்துவிட்டது. எனவே, மிஷன் சக்தி திட்டம் புதியது இல்லை. பிற நாடுகளுக்கு இடையே தேவையில்லாமல் குழப்பம் ஏற்படாதிருப்பதற்காக 2012-இல் சோதனை செய்யவில்லை. மிஷன்சக்தி திட்டத்தைச் செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்குத்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். 
    ஆனால், பிரதமர் மோடி இது தன்னுடைய அரசின் திட்டத்தை போல முன்னிறுத்துகிறார். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை(டிஆர்டிஓ)காங்கிரஸ் ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது. மிஷன் சக்தி திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடப்பது உண்டு. எனவே, இதற்கு தேவையில்லாத முன்னுரிமை அளிக்க வேண்டியதில்லை. காங்கிரஸ் அரசு செயல்படுத்திய திட்டத்துக்கு பிரதமர் மோடி சொந்தம் கொண்டாடுகிறார். 
    வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கருப்புப்பணத்தை மீட்டெடுத்து கொண்டுவந்தாரா? என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறிய வாக்குறுதி என்னானது? ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறிய வாக்குறுதிக்கு பிரதமர் மோடியின் பதில் என்ன? என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai