Enable Javscript for better performance
லஞ்சம்: கிராமப் பஞ்சாயத்து செயலாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வீட்டுமனைக்கு இணையவழி பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
    கோலார் மாவட்டம், பங்காருபேட்டை வட்டம், கசபா ஒன்றியம் தம்மனஹள்ளியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு சொந்தமான வீட்டுமனைக்கு இணையவழி பட்டாவை வழங்கக் கோரி, சின்னக்கோடி கிராமப் பஞ்சாயத்துக்கு மனு அளித்துள்ளார். 
    இதற்கு கிராமப் பஞ்சாயத்து செயலாளர் முனியப்பா, ரூ. 5 ஆயிரம் லஞ்சம் அளிக்குமாறு கேட்டுள்ளார். புதன்கிழமை ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை அந்த நபர் முனியப்பாவிடம் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினர் அவரை பிடித்து கைது செய்தனர். 
    கைது செய்யப்பட்ட முனியப்பாவிடம் கோலார் லஞ்ச ஒழிப்பு படை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai