"ஊதுபத்தி உற்பத்தி தொழிலால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு'

ஊதுபத்தி உற்பத்தி தொழிலால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக அகில இந்திய ஊதுபத்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத்பாபு தெரிவித்தார்.

ஊதுபத்தி உற்பத்தி தொழிலால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக அகில இந்திய ஊதுபத்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத்பாபு தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சிறு, குறு தொழிலான ஊதுபத்தி உற்பத்தி, கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக சரக்கு சேவை வரி குறைப்புக்கு பிறகு இந்த தொழில் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு சுமார் 20 கோடி வரை பார்வையாளர்கள் வந்ததால், ஊதுபத்தி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. 
இதனால் நிகழாண்டு அதன் தேவை மேலும் அதிகரித்துள்ளது. ஊதுபத்தி உற்பத்தி தொழிலால் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் ஊதுபத்தி உற்பத்தியில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் கடந்த ஆண்டு 1 லட்சம் பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 
இந்த தொழிலால் குறைந்த கல்வி அறிவு உள்ள பெண்களும் சுயகெளரவத்தோடு பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதனால் ஊதுபத்தி உற்பத்தியில் அதிக அளவிலான பெண்கள் பங்கு கொள்வது அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த தொழிலில் பெண்கள் ஈடுபடுவது பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com