அனைத்து மதத்தினரின் நலனுக்காகவும் பாடுபடுவேன்: மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்

அனைத்து மதத்தினரின் நலனுக்காகவும் பாடுபடுவேன் என மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் உறுதியளித்துள்ளார்.

அனைத்து மதத்தினரின் நலனுக்காகவும் பாடுபடுவேன் என மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தேன். அப்போது எனக்கு போதுமான அனுபவம் இருக்கவில்லை. மேலும், பாஜகவின் பொய்யான பிரசாரத்துக்கு மக்கள் செவிமடுத்ததால் தோல்வியடைந்தேன். 
வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு ரூ.15லட்சம் தருவதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தருவதாகவும், பொலிவுறு நகரங்களை அமைக்கவிருப்பதாவும் பாஜகவினர் தெரிவித்த வாக்குறுதிகளை அப்போது மக்கள் நம்பி ஏமாற்றமடைந்தனர். 
பாஜக மீது அதிருப்தி அடைந்துள்ள வாக்காளர்கள், இம்முறை எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக வேட்பாளரான பி.சி.மோகன் கடந்த 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவர் எங்கு சென்றுவிட்டார். பெலந்தூர் ஏரியை புனரமைக்க ரூ.350கோடி தருவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், இந்த நிதியை அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறிய போது பி.சி.மோகன் எங்கிருந்தார்? 
எனது அரசியல் வாழ்க்கை பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பாகுபாட்டின்படி அமையவில்லை. பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டவன். எல்லோரையும் நான் சமமாகவே கருதுகிறேன். சமுதாயத்தை பிளவுபடுத்துவது பாஜகவின் செயல்திட்டமாகும். மத்திய பெங்களூரு தொகுதியில் உள்ள 21.6 லட்சம் வாக்காளர்களையும் நம்பி நான் இருக்கிறேன். எனவே, மதச் சிறுபான்மையினரை மட்டும் நம்பியிருக்கவில்லை. 
மத்திய பெங்களூரு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நிறைவேற அனைத்து அரசு முகமைகளையும் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. எனது யோசனையின்பேரில் தகவல் தொழில்நுட்பத் தடத்தின் வளர்ச்சிக்கு ரூ.175 கோடியை பெங்களூரு மாநகராட்சி ஒதுக்கியது. எனக்கும், பாஜக வேட்பாளர் பி.சி.மோகனுக்கும் இடையேதான் போட்டி. எனவே, நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுவது குறித்து எனக்கு கவலையில்லை என்றார்.

கர்நாடக மக்களவைத் தேர்தல்: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

முதல்கட்டத் தேர்தல்
     தொகுதி                பாஜக    காங்கிரஸ்-  மஜத
1. உடுப்பி                  ஷோபாகரந்தலஜே    பிரமோத்மத்வராஜ்
2. ஹாசன்    ஏ.மஞ்சு    பிரஜ்வல் ரேவண்ணா
3. தென்கன்னடம்    நலீன்குமார்கத்தீல்    மிதுன்ராய்  
4. சித்ரதுர்கா                   ஏ.நாராயணசாமி    பி.என்.சந்திரப்பா 
5. தும்கூரு                    ஜி.எஸ்.பசவராஜ்    எச்.டி.தேவெகெளடா
6. மண்டியா                    சுமலதா(சுயேச்சை)-பாஜக ஆதரவு    நிகில்குமாரசாமி
7. மைசூரு                   பிரதாப்சிம்ஹா             சி.எச்.விஜயசங்கர்   
8. சாமராஜ்நகர்                சீனிவாஸ்பிரசாத்    ஆர்.துருவநாராயண்  
9. ஊரக பெங்களூரு       அஸ்வத்நாராயணா         டி.கே.சுரேஷ்       
10. வடபெங்களூரு               டி.வி.சதானந்தகெளடா     கிருஷ்ணபைரேகெளடா 
11. மத்திய பெங்களூரு        பி.சி.மோகன்                 ரிஸ்வான் அர்ஷத்  
12. தென்பெங்களூரு            தேஜஸ்விசூர்யா              பி.கே.ஹரிபிரசாத்      
13. சிக்பளாப்பூர்              பி.என்.பச்சேகெளடா    வீரப்பமொய்லி    
14. கோலார்                   எஸ்.முனிசாமி    கே.எச்.முனியப்பா

இரண்டாம்கட்டத் தேர்தல்
15. சிக்கோடி                  அன்னாசாஹெப்ஜொள்ளே    பிரகாஷ்ஹுக்கேரி  
16. பெலகாவி                சுரேஷ் அங்கடி    விருபாக்ஷி சாதுன்னவர்  
17. பாகல்கோட்                பர்வதகெளடா கட்டிகெளடர்      வீணாகாஷப்பனவர்  
18. விஜயபுரா                   ரமேஷ்ஜிகஜினகி    சுனிதா தேவனந்த்
19. கலபுர்கி                     உமேஷ்ஜாதவ்    மல்லிகார்ஜுனகார்கே  
20. ராய்ச்சூரு                    ராஜா அம்ரேஷ்நாயக்    பி.வி.நாயக்
21. பீதர்                          பக்வந்த் கூபா    ஈஸ்வர்கண்ட்ரே
22. கொப்பள்                       சங்கண்ணாகரடி    கே.ராஜசேகர்ஹித்னல்
23. பெல்லாரி                     தேவேந்திரப்பா                 வி.எஸ்.உக்ரப்பா
24. ஹாவேரி                     சிவக்குமார் உதாசி             டி.ஆர்.பாட்டீல்
25. தார்வாட்                      பிரஹலாத்ஜோஷி            அறிவிக்கவில்லை
26. தாவணகெரே                  எம்.சித்தேஸ்வர்               சாமனூர் சிவசங்கரப்பா
27. வடகன்னடம்                  அனந்த்குமார்ஹெக்டே    ஆனந்த் அஸ்தினோடிகர்
28. சிவமொக்கா                    பி.ஒய்.ராகவேந்திரா    மதுபங்காரப்பா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com