பெங்களூரிலிருந்து புணே, விஜயவாடாவுக்கு புதிய சொகுசுப் பேருந்து சேவை

பெங்களூரிலிருந்து மூணாறு, செகந்தராபாத், புணே, விஜயவாடாவுக்கு புதிய சொகுசுப் பேருந்து சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
பெங்களூரிலிருந்து புணே, விஜயவாடாவுக்கு புதிய சொகுசுப் பேருந்து சேவை

பெங்களூரிலிருந்து மூணாறு, செகந்தராபாத், புணே, விஜயவாடாவுக்கு புதிய சொகுசுப் பேருந்து சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து கர்நாடகமாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரிலிருந்து  மூணாறு, செகந்தராபாத், பூணே, விஜயவாடாவுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மூணாறு: பெங்களூரு-மூணாறு இடையிலான பேருந்து பெங்களூரிலிருந்து ஒசூர், கோயமுத்தூர், உடுமலைப்பேட்டை வழியாக தினமும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்காலை 10மணிக்கு மூணாறு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில், மூணாறில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு வந்தடைகிறது. இதன்கட்டணம் ரூ.800.

செகந்தராபாத்: பெங்களூரு-செகந்தராபாத் இடையிலான பேருந்து பெங்களூருவில் இருந்துஅனந்த்பூர், கூட்டி, கர்னூல், ஹைதராபாத் வழியாக தினமும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.50மணிக்கு செகந்தராபாத் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில், செகந்தராபாத்தில் இருந்து தினமும் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு பெங்களூரு வந்தடைகிறது. இதன்கட்டணம் ரூ.1450.

புணே: பெங்களூரு-புணே இடையிலான பேருந்து பெங்களூருவில் இருந்து தாவணகெரே, பெலகாவி வழியாக தினமும் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30மணிக்கு புணே சென்றடைகிறது. மறு மார்க்கத்தில், புணேவில் இருந்து தினமும் மாலை 6.30மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு பெங்களூரு வந்தடைகிறது. இதன்கட்டணம் ரூ.1700.

விஜயவாடா: பெங்களூரு-விஜயவாடா இடையிலான பேருந்து பெங்களூருவில் இருந்து கோலார், சித்தூர், திருப்பதி வழியாக தினமும் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30மணிக்கு விஜயவாடா சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், விஜயவாடாவில் இருந்து தினமும் மாலை 6.30மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு வந்தடைகிறது. இதன்கட்டணம் ரூ.1500.

கர்நாடகம், கோவா, தமிழகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, புதுச்சேரி, கேரளம் மாநிலங்களிலுள்ள முன்பதிவுமையங்களில் 30 நாள்களுக்குமுன்பாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. மேலும்விவரங்களுக்கு 080-49696666என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்-முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு  w‌w‌w.‌k‌s‌r‌t​c.‌i‌n  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com