மே 12-இல் தொழிலாளர் தின விழா

கர்நாடக மாநில தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் மே தின விழா மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

கர்நாடக மாநில தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் மே தின விழா மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக மாநில திமுகவின் அங்கமான கர்நாடக மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்க (தொமுச) பேரவை சார்பில் பெங்களூரு மாமூல்பேட், பெள்ளி பசவண்ணா கோயில் வீதியில் மே 12-ஆம் தேதி காலை 10 மணியளவில் மே தினவிழா நடைபெற உள்ளது. 
மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் நடக்கும் இந்தவிழாவில் மாநில தொமுச பேரவைச் செயலாளர் டி.சிவமலை அனைவரையும் வரவேற்கிறார், மாநில திமுக அவைத்தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கும் பாஜக எம்பி பி.சி.மோகன், தலைமை தொமுச பேரவை தலைவர் வே.சுப்புராமன், கர்நாடக மாநில குடியரசு சேனைத் தலைவர் ஜிகினிசங்கர், பெங்களூரு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரேகாகதிரேசன், பத்திரிகையாளர்கள் ஆ.வி.மதியழகன், இரா.வினோத், வெங்கடேஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் பி.பழனி, டி.சந்திரசேகர் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்கள். 
நிகழ்ச்சியில் தொமுச பேரவை பொருளாளர் சிக்பேட் எம்.ராமன் நன்றி கூறுகிறார். இந்த விழாவில் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு இலவச சீருடை, தொழிலாளர் குழந்தைகளுக்கு பள்ளி பைகள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு மதிய உணவு அளிக்கப்படும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com