"கட்டடக் கலைஞர் படிப்பில் சேர விண்ணப்பிப்பது அவசியம்'

கட்டடக்கலைஞர் படிப்பில் சேர விண்ணப்பிப்பது கட்டாயமாகும் என்று கர்நாடக தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்டடக்கலைஞர் படிப்பில் சேர விண்ணப்பிப்பது கட்டாயமாகும் என்று கர்நாடக தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக தேர்வு ஆணையத்தின் வாயிலாக கட்டடக்கலைஞர் படிப்புக்கு சேர்க்கை பெற, பொதுநுழைவுத்தேர்வு-2019-க்கு விண்ணப்பித்திருப்பது கட்டாயமாகும். எனவே, கட்டடக்கலைஞர் படிப்புக்கு சேர்க்கை பெற தேசிய கட்டடக்கலை திறனறித்தேர்வு (Na‌t‌i‌o‌n​a‌l A‌p‌t‌i‌t‌u‌d‌e T‌e‌s‌t ‌i‌n A‌r​c‌h‌i‌t‌e​c‌t‌u‌r‌e-​N​A​T​A)   எழுதியிருக்கும், ஆனால், பொதுநுழைவுத்தேர்வு-2019-க்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்காத மாணவர்கள்,  w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் மே 14-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மே 18-ஆம் தேதி மாலை 5.30மணிக்குள் உரிய கட்டணங்களுடன் விண்ணப்பங்களை பதிவிட வேண்டும். 
இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவிடாதவர்களுக்கு கட்டடக்கலைஞர் படிப்புக்கான சேர்க்கை பெற இயலாது. மேலும் விவரங்களுக்கு 080-23564583, 23361786 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com