பெங்களூரிலிருந்து சென்னை புறப்படும் ரயில்களுக்கான அறிவிப்பை முறைபடுத்த வலியுறுத்தல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ள நிலையில், பெங்களூரிலிருந்து சென்னை புறப்படும் ரயில்கள் குறித்த அறிவிப்பின் போது ரயில் நிலையத்தின் மாற்றப்பட்ட பெயரை குறிப்பிட வேண்டும் என கர்நாடக அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை தென்மேற்கு ரயில்வே மண்டல மேலாளர் அசோக்குமார்வர்மாவைச் சந்தித்து கர்நாடக மாநில அதிமுக இணைச் செயலாளர் எஸ்.டி.குமார் புகார் மனு அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"தமிழக முதல்வராக மக்கள் செல்வாக்கோடு திகழ்ந்த எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை "புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்' என்று மத்திய அரசு மாற்றியது. 
இதை பெங்களூரு ரயில் நிலையம் மட்டுமல்லாது, கர்நாடகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து ரயில்களைக் குறிப்பிடும் போது பெயர் மாற்றம் பெற்றுள்ள ரயில் நிலையத்தின் பெயரை குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இதை உடனடியாக கவனித்து, நடவடிக்கை எடுக்கப் போவதாக மண்டல மேலாளர் அசோக்குமார்வர்மா உறுதி அளித்தார்'என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com