முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வட்டி வசூல்: 4 பேர் கைது
By DIN | Published On : 18th May 2019 08:45 AM | Last Updated : 18th May 2019 08:45 AM | அ+அ அ- |

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வட்டி வசூலித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோலார் மாவட்டம், மாலூர் ஜெயமங்களா கிராமத்தைச் சேர்ந்தவர் போலேகெளடா. இவர் முன்னா என்பவரிடம் ரூ. 4 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். வட்டி கொடுக்க தாமதமானதால், வெள்ளிக்கிழமை தனது நண்பர்கள் சுரேஷ், மஞ்சுநாத், நவீத் ஆகியோருடன் வந்த முன்னா, துப்பாக்கி முனையில் போலே கெளடாவை மிரட்டி வட்டி வசூல் செய்துள்ளனர்.
இதுகுறித்து போலேகெளடா அளித்த புகாரின் பேரில், முன்னா, சுரேஷ், மஞ்சுநாத், நவீத்தை மாலூர் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இவர்களில் சுரேஷின் பெயர் ரெளடிப் பட்டியலில் உள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கிக்கு உரிமம் உள்ளது. அது யார் பெயரில் உள்ளது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றனர்.