முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பெங்களூரில் ஆலங்கட்டி மழை: வாகனப் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 18th May 2019 08:48 AM | Last Updated : 18th May 2019 08:48 AM | அ+அ அ- |

பெங்களூரில் ஆலங்கட்டி மழை பெய்ததால், வாகன போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக பெங்களூரில் பகலில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணி அளவில் திடீரென ஆலங்கட்டியுடன்கூடிய பலத்த மழை பெய்தது. சாந்திநகர், ராஜாஜிநகர், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆர் லேஅவுட், மெஜஸ்டிக், காந்திநகர், மடிவாளா, மகாலட்சுமிலேஅவுட், கோரமங்களா, வில்சன்கார்டன் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடியது.
மேலும், ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து தடைபட்டது. பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது. மாலையிலும் பலத்த மழை தொடர்ந்து பெய்ததால் வீடுகளுக்கு செல்லமுடியாமல் மக்கள் தவித்தனர்.