முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பேருந்தில் பயணியிடமிருந்து ரூ.ஒரு கோடி பறிமுதல்
By DIN | Published On : 18th May 2019 08:45 AM | Last Updated : 18th May 2019 08:45 AM | அ+அ அ- |

அரசு பேருந்தில் பயணியிடமிருந்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், மங்களூரு வடக்கு காவல் சரகத்தில் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அரசு பேருந்தை சோதனை செய்தனர். அப்போது, பேருந்து பயணி பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவரின் பையில் ரூ. ஒரு கோடி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், மஞ்சுநாத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.