முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது
By DIN | Published On : 18th May 2019 08:45 AM | Last Updated : 18th May 2019 08:45 AM | அ+அ அ- |

எலுமிச்சை வியாபாரி கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு பழைய குட்டதள்ளியைச் சேர்ந்தவர் பரத் (32). இவர் சிட்டிமார்கெட் பகுதியில் எலுமிச்சை வியாபாரம் செய்து வந்தார். இவரை கடந்த மே 14-ஆம் தேதி மர்மநபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆய்தங்களால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், வெங்கடேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். சிட்டி மார்கெட் பகுதியில் பணம் வசூல் செய்து வந்த மார்கெட் வேலு என்பவருக்கும், பரத்துக்கும் முன்விரோதம் இருந்ததாம். இதனால் ஏற்பட்ட தகராறில் பரத் சிறைக்குச் சென்று அண்மையில் விடுதலையாகியுள்ளார்.
முன்விரோதத்தால் வேலுவின் தூண்டுதலின் பேரில் பரத்தை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 3 பேரிடம் தொடந்து விசாரணை செய்து வரும் போலீஸார், தலைமறைவாக உள்ள மார்கெட் வேலு என்பவரை தேடி வருகின்றனர்.