குந்தகோலா, சின்சோலி தொகுதிகளை பாஜக கைப்பற்றும்
By DIN | Published On : 18th May 2019 08:48 AM | Last Updated : 18th May 2019 08:48 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் குந்தகோலா, சின்சோலி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மே 23-ஆம் தேதி மக்கள்வைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே நேரத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. குந்தகோலா, சின்சோலி உள்ளிட்ட 2 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் பாஜகவின் பலம் மேலும் அதிகரிக்கும், சுயேச்சைகள், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைக்கும். மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாநிலத்தில் கூட்டணி ஆட்சி 10 நாள்களுக்கு மேல் தொடராது என்பது அனைவரின் கணிப்பாக உள்ளது. முதல்வர் குமாரசாமியும், முன்னாள் முதல்வர் சித்தராமைவும் சுட்டுரை பக்கத்தில் கருத்துகளை பதிவிடுவதை மக்கள் கவனித்து வருகின்றனர்.
தேசிய அளவில் கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பாஜகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.