செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 13 பேர் கைது
By DIN | Published On : 20th May 2019 09:35 AM | Last Updated : 20th May 2019 09:35 AM | அ+அ அ- |

பெங்களூரில் ரூ. 3.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 13 பேரை கைது செய்தனர்.
பெங்களூரில் உள்ள சுப்ரமண்யபுரா, எலக்ட்ரானிக் சிட்டி, விநாயகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில் ரூ. 3.5 கோடி மதிப்பிலான 4 ஆயிரம் கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தென் கன்னட மாவட்டத்துக்குள்பட்ட அப்துல் ரஷீத் (48), ஷபி (30), முன்னா (25), இப்ராஹீம் (28), அன்னூ (23), பெங்களூருவைச் சேர்ந்த ஜுபீர்கான் (33), சலீம் (50), தாஹீர்கான் (25), பாஷா (40), முபாரக் (26), அலிகான் (40), கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நெளஷத் (27), சித்திக் (40) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெறுகிறது.