கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமையும்

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததும் பாஜக ஆட்சி அமையும் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததும் பாஜக ஆட்சி அமையும் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுக்கு வேறு வேலையில்லாததால்,  எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.  ஆந்திர மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை மக்கள் புறக்கணிக்க உள்ளனர்.  அதனால்தான் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். 
ஆட்சி அதிகாரத்தை இழக்கவுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, முதல்வர்கள் குமாரசாமி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திரபாபு நாயுடு சந்தித்துவருவது அவசியமற்ற வேலையாகும். சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகளால் தனது ஆட்சியை ஆந்திரத்தில் அவர் இழக்கவிருக்கிறார். 
கர்நாடகம் கண்ட முதல்வர்களில் மிகவும் மோசமானவர் சித்தராமையா. உண்மை ஒருநாள் வெளியே வரும் என்பதற்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் அளித்த பேட்டி சிறந்த உதாரணமாகும்.  ரோஷன் பெய்க் கூறியிருக்கும் அனைத்தும் உண்மையாகும்.  அதில் பொய் என்பதே இல்லை. 
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் குறித்து ரோஷன்பெய்க் கூறியிருப்பதில் தவறொன்றுமில்லை. முதல்வராக இருந்தபோது யாருடைய ஆலோசனையையும் எடுத்துக்கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதால்தான் சித்தராமையா,  பல்வேறு சிக்கல்களில் சிக்கி தேர்தலில் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியில் நடைபெறும் அரசியல் நாடகங்களை ரோஷன் பெய்கால் சகித்துக் கொள்ள முடியாததால்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com