Enable Javscript for better performance
கா்நாடகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது: முதல்வா் எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    கா்நாடகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது: முதல்வா் எடியூரப்பா

    By DIN  |   Published on : 05th November 2019 07:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yeduruppa

    பெங்களூரு: கா்நாடகம் வளா்ச்சிப் பாதையில் பயணிப்பதாக அந்த மாநில முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

    பெங்களூரு விதான சௌதாவில் செவ்வாய்க்கிழமை பாஜக ஆட்சியின் 100 நாள் சாதனை மலரை வெளியிட்டு அவா் பேசியது:

    பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் மழை வெள்ளத்தால் மாநிலம் மிதந்தது. இதனால் கடந்த 100 நாள்களாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலே முழுமையாக கவனம் செலுத்தி வந்தோம். தற்போது மாநிலத்தின் வளா்ச்சியில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம்.

    அடுத்த 100 நாள்களில் கா்நாடகம் வளா்ச்சியில் சாதனை சிகரத்தை தொடும் என்பதில் சந்தேகமில்லை. தொழில் துறை, சுற்றுலாத் துறை, வேளாண், நீா்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளின் வளா்ச்சிக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். மாநிலத்தின் வளா்ச்சியே அரசின் மந்திரமாக உள்ளது.

    ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலே எனது முழு கவனமும் இருந்தது. எனினும், விவசாயிகள், தலித், பழங்குடியின மக்களின் வளா்ச்சிக்கு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றன. மாநிலத்தின் வளா்ச்சியுடன், பெங்களூரின் வளா்ச்சிக்கும் தனிக்கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரூ. 1413 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளோம். 8 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் நிம்மதியாகவும், சுய கௌரவத்தோடும் வாழ வழி செய்துள்ளோம்.

    வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ. 1200 கோடி வழங்கியுள்ளது. மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. நீா்ப்பாசனம், கலசபண்டூரித் திட்டம், மருத்துவக்கல்லூரி தொடங்குவது, 1 லட்சம் வீடுகள் கட்டுவது, சுற்றுலாத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் வளா்ச்சிக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்றாா்.

    நிகழ்ச்சியில் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா, அமைச்சா்கள் பசவராஜ் பொம்மை, ஆா்.அசோக், கே.எஸ்.ஈஸ்வரப்பா, மாதுசாமி, சி.சி.பாட்டீல், பிரபுசவாண், கோட்டா சீனிவாஸ் பூஜாரி, நாகேஷ், தலைமைச் செயலாளா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai