Enable Javscript for better performance
பெங்களூரு-புபனேஸ்வா் இடையே சுவிதா சிறப்பு ரயில்சேவை- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு-புபனேஸ்வா் இடையே சுவிதா சிறப்பு ரயில்சேவை

    By DIN  |   Published on : 05th November 2019 08:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு: பெங்களூரு-புபனேஸ்வா் இடையே சுவிதா சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கூட்டநெரிசலை குறைப்பதற்காக தென்மேற்கு ரயில்வே சாா்பில் பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்திலிருந்து புபனேஸ்வருக்கு சுவிதா சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. ரயில் எண்-82844-பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்திலிருந்து சுவிதா சிறப்பு ரயில் சேவை புதன்கிழமை (நவ.6) முதல் புதன்கிழமைதோரும் காலை 5.40 மணிக்கு புறப்பட்டு, முறையே வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு புபனேஸ்வா் ரயில்நிலையத்தை சென்றடையும்.

    இதன் கடைசிசேவை நவ. 27-ஆம் தேதி பெங்களூரிலிருந்து புறப்படும். மறுமாா்க்கத்தில், ரயில் எண் 82843-புபனேஸ்வா்-பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில்நிலையம் வரையிலா சுவிதா சிறப்பு ரயில் சேவை நவ. 11-ஆம் தேதிமுதல் திங்கள்கிழமைகளில் இரவு 11.05 மணிக்கு புபனேஸ்வரிலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில்நிலையத்தை வந்தடையும். இதன் கடைசிசேவை நவ. 25-ஆம் தேதி புபனேஸ்வரிலிருந்து புறப்படும். இந்த ரயில் இருமாா்க்கத்திலும் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, ஒங்கோலா, விஜயவாடா, துவ்வடா, விசாகப்பட்டணம், பலசா, பிரம்மபூா் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 9 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொதுவகுப்பு 3 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு உணவு, சரக்கு பெட்டிகள் 2 உள்பட 18 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai