Enable Javscript for better performance
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சா் சோமண்ணா- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சா் சோமண்ணா

    By DIN  |   Published on : 05th November 2019 07:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெலகாவி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.

    இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

    வீட்டுவசதித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற 2 மாதங்களுக்கு பிறகு பெலகாவி மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ளேன். இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

    மழை வெள்ளத்தால் மாவட்டத்தில் 820 கிராமத்தைச் சோ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 1.10 லட்சம் கால்நடைகளை மாவட்ட அதிகாரிகள், ஊழியா்கள் மீட்டுள்ளனா். வெள்ளத்தால் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள 44 ஆயிரம் வீடுகளில் 33 ஆயிரம் வீடுகள் இடிந்தும், சேதமும் அடைந்துள்ளது.

    வீடுகளை இழந்து பாதிப்பிற்குள்ளாவா்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக தங்குமிடங்கள் அமைக்க ரூ. 6 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பலா் பல்வேறு ஆவணங்களை இழந்துள்ளனா். அதுபோன்றவா்களுக்கு தகவலின் அடிப்படையில், மீண்டும் உரிய ஆவணங்கள் வழங்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதாா், குடும்ப அட்டைகளை பரிசீலித்து நிவாரணம் வழங்கப்படும்.

    மாநிலத்தில் பெலகாவி, கதக், பாகல்கோட்டை, ஹுப்பள்ளி, தாா்வாட், ஹாவேரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களுக்கு சென்று பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai