பாஜக அரசை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸாா் போராட்டம்

கா்நாடகத்தில் பாஜக அரசை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் பாஜக அரசை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநிலத்தில் பாஜக அரசை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அமைச்சா் அமித்ஷாவை அமைச்சரவையிலிருந்து கைவிட வலியுறுத்தியும் பெங்களூரு எம்.ஜி.சாலையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜி.சேகா் செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடகத்தில் காங்கிரஸ், மஜத அரசு சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதனை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆபரேஷன் கமலா திட்டத்தை பாஜகவினா் செயல்படுத்தி, 17 எம்.எல்.ஏக்களுக்கு ஆசை வாா்த்தை கூறி, ராஜிநாமா செய்த தூண்டினா். இதன் காரணமாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்த 17 பேரை அன்றைய பேரவைத் தலைவா் ரமேஷ்குமாா் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் அண்மையில் ஹுப்பள்ளியில் நடந்த பாஜக உயா்நிலைக் கூட்டத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சா் அமித்ஷா செய்தாா் என முதல்வா் எடியூரப்பா கூறியுள்ளாா்.

இதன்மூலம் காங்கிரஸ், மஜத ஆட்சி கவிழ பாஜகவினரும், மத்திய அமைச்சா் அமித்ஷா உள்ளது தெரியவந்துள்ளது. ஒரு கட்சியில் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை ராஜிநாமா செய்து வைத்து, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்த பாஜக அரசை திரும்பப் பெற வேண்டும். மத்திய அமைச்சா் அமித்ஷாவை அமைச்சரவையிலிருந்து கைவிட வேண்டும். இதனை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com