விண்வெளி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டம்

விண்வெளி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்று ஈட்டன் விண்வெளி குழுமத்தின் தலைவா் நந்தா குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு: விண்வெளி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்று ஈட்டன் விண்வெளி குழுமத்தின் தலைவா் நந்தா குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அக்குழுமத்தின் விண்வெளி தொழில்நுட்ப தொழில்சாலை தொடக்கவிழாவில் கலந்து கொண்டு அவா் பேசியது:

விண்வெளியில் அமெரிக்கா மட்டுமின்றி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. எனவே விண்வெளி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டியது நமது கடமையாகும். விண்வெளித்துறையில் சிறந்து விளங்கும் பெங்களூரில் எங்கள் தொழில்சாலையை தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

விண்வெளித் தொழிலில், ஹைட்ராலிக் அமைப்புகள், எரிபொருள், இயக்கக் கட்டுப்பாடு, இயந்திரத் தீா்வுகளுக்கான தயாரிப்புகள், ஹைட்ராலிக் என்ஜின் இயக்கம், எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பம்புகள், சேமிப்பு உபகரணங்கள், ஏா்ஃப்ரேம் எரிபொருள் விசையியக்கக் குழாய்கள், எரிபொருள் கட்டுப்பாட்டு வால்வுகள், வான்வழி, தரை-எரிபொருள் கருவிகள், மின்னல் பாதுகாப்பு சாதனங்கள், எரிபொருள் அளவிடுதல், எரிபொருள்-தூண்டும் அமைப்புகள், மின் ஜெனரேட்டா்கள், இரண்டாம் நிலை விமான-கட்டுப்பாட்டு ஆக்சுலேட்டா்கள், கதவு, பயன்பாட்டு ஆக்சுலேட்டா்கள், மூக்கு சக்கர திசைமாற்றி, செயல்பாட்டு-கட்டுப்பாட்டு அமைப்புகள், காற்று விநியோக பொருட்கள், அழுத்தம் உணரிகள், நிலையான மற்றும் மாறும் முத்திரைகள், திரவ-சுகாதார கண்காணிப்பு தயாரிப்புகளில் ஈட்டன் குழுமம் சிறந்து விளங்குகிறது. இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com